கணவன் இறந்துவிட்டான்
இவள் சுமங்கலி தான்
பொட்டும் இல்லை பூவும் இல்லை
இவள் சுமங்கலி தான்
உடுத்தும் உடை வெண்மை
இவள் சுமங்கலி தான்
கழுத்தில் தாலியும் இல்லை
காலில் மெட்டியும் இல்லை
இவள் சுமங்கலி தான்
சமுதாயம் இவளை விதவை என்றாலும
இவள் சுமங்கலி தான்
ஏனென்றால் இவள் பெயர் சுமங்கலி
கடவுள் இவளை சுமங்கலி என்று
நினைத்துவிட்டான் அதனால்தான்
எல்லோரும் அழைக்கும் வண்ணம்
இவள் பெயரை சுமங்கலி என மாற்றிவிட்டான்
இவள் என்றும் சுமங்கலி தான்!!!…..
இவள் சுமங்கலி தான்!!….
நன்றி : தேன்மொழி | கவிதைப்பூக்கள்
