செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பற்களின் இடைவெளியை போக்குவது எப்படி?

பற்களின் இடைவெளியை போக்குவது எப்படி?

1 minutes read

பற்களின் இடைவெளியை போக்குவது எப்படி?
இரண்டு பற்களுக்கு இடையே உள்ள இடைவெளியை அடைக்க செயற்கை முறையிலான பல்லை வைக்க கூடிய சிகிச்சையை கொள்ளலாம். ஆனால் இது சிறிய பற்கள் உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
அனைத்து பற்களுக்கு இடையேயும் இடைவெளி இருந்தால் அவற்றை அடைப்பது தவறு. ஏனெனில் அது பற்களின் ஈறுகளை பாதித்து, பற்களின் அளவை பெரிதாக்கிவிடும்.
பற்களுக்கு இடையே இருக்கும் இடைவெளிகளை சரிசெய்து, பற்கள்களை சீரமைக்க க்ளிப் போடுவது ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும்.
ஆனால் பற்களுக்கு க்ளிப் போட்டு இருக்கும் போது பற்களில் சேரும் அழுக்குகள், கரைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது செய்ய வேண்டியவை
பிரஷின் தலைப் பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே அது நல்ல பிரஷ். அத்தகைய பிரஷினை கொண்டு பல் துலக்கினால் பல் வரிசையின் அனைத்து பகுதிகளும் சுத்தமாகும்.
தினமும் பற்களை காலை, இரவு என்று இரண்டு முறைகள் பல் துலக்க வேண்டும். மேலும் சாப்பிட்ட பின்பும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
தினமும் காலையில் பல் துலக்கும் முன் சுத்தமான நல்லெண்ணெய்யில் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.
பற்களை வெண்மையாக்க உப்பு மிகவும் சிறந்த பலனை தருகிறது. அதனால் தினமும் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
கரும்பு, அன்னாச்சிப்பழம் போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் பற்களுக்கு இடையே உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நீங்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.