செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவனம் மகளே | கவிதை | ஜெ.ஈழநிலவன்

கவனம் மகளே | கவிதை | ஜெ.ஈழநிலவன்

0 minutes read

இனி கவனம் மகளே!
இதன் பிறகுதான்
நீ
நெருப்பின் வழி
பயணிக்க வேண்டும்!

பிரபஞ்சத்தின்
இறுதி தொட்டியில்
கனத்தழும்
கடைசிக்குரல் கூட
பெண்ணதான் இருக்கிறாள்!

நீருக்குள் நிலையெடுக்கும்
வேரைப்போல்
உன்னை சுற்றிசுழலும்
உருமாற்றப்பட்ட
முகங்கள்!

வானம் மூடியிருப்பதாய்
எண்ணாதே
மேகமெல்லாம்
கண் என்று எண்ணிக்கொள்!

நம்பிக்கை என்ற
அகராதிக்குள்
மூடிக்கிடக்கு
துரோகத்தின் பக்கங்கள்!

மூங்கிலுக்குள்
முரண்டு கொள்ளும்
காற்றுப்போல்
தப்பித்து வெளியேற முடியாது
மகளே!

சத்தமிடும்
கதவு
துயரத்தின் குறியீடு
ஒவ்வொரு வீட்டிலும்
இது ஒரு
மீளமுடியா திசை!

ஆடை மாற்றும் போது
சுவர்களை நம்பாதே
சுவர்கள்தான்
பல குற்றங்களை மறைத்துக்கொண்டிருக்கு!

தொடுதல்
ஒரு போதும் தீபோல்
இருக்காது
இருட்டின் தொடுதல்
உன் நிழலை மறைத்துவிடும்!

அர்த்தபடும் அன்பு
ஆழ்கடலின்
அலைபோன்றது
வருவதாக எண்ணிக்கொள்
சிற்றலைகளை கண்டு
சிதைந்துவிடாதே!

அடர்வனத்தில்
கைவிடப்பட்ட
பாதைபோன்றது
நமக்கான சுதந்திரம்
நீ
பயணிக்க நினைத்தால்
முட்கள் வழிமறிக்கும்!

இதன் பின்பு
நீ
கவனமாக இருக்கவேண்டும்
பெண் என்ற
தடயத்தை
யுகம்யுகமாய்
வலியுடன் தான் சுமந்துகொண்டிருக்கின்றோம்.!

 

நன்றி : ஜெ..ஈழநிலவன் | tamilcnn.lk

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.