Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி ஒளியால் திரைக்கு வழிகாட்டியவர் இயக்குநர் பாலுமகேந்திரா

ஒளியால் திரைக்கு வழிகாட்டியவர் இயக்குநர் பாலுமகேந்திரா

7 minutes read

தமிழ்த்திரையின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், சிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா அவர்கள் 13.2.2014 அன்று மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழின உணர்வாளர்களும் அவரது திரைப்பட்டறையில் குழுமியிருந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

பாலுமகேந்திரா அவர்கள், ஒளியால் தமிழ்த் திரைக்கு புதிய வெளிச்சமேற்றிய படைப்பாளி. சமகாலத் தமிழர் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர்.

தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றிய தோடு மட்டுமின்றி தனக்கென ஒரு உத்தியை கையாண்டு தமிழ்த் திரையுலகில் தனியிடம் பெற்றவர்.

1939 மே 19 ஆம் நாள் இலங்கையில் மட்டக்களப்பு அருகிலுள்ள அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர்.பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா.அவரது தந்தை பாலநாதன். கணித ஆசிரியர், கல்லூரி அதிபர்.

பாலுமகேந்திரா இலண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்து புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்றார். 1971இல் ஒளிப்பதிவுக் கலையில் தங்கப் பதக்கம் பெற்றார்.

திரைப்பட வாழ்க்கை :

அவரது பட்டயப்படிப்புக்காக தயார் செய்த திரைப்படத்தைக் கண்டு அவரை ‘செம்மீன்’ படப்புகழ் ராமு காரியத் அவரது ‘நெல்லு’ என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972 இல் சிறந்த ஒளிப்பதிவுக் கான கேரள மாநில விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

கே. எஸ். சேதுமாதவனின் ‘சுக்கு’,’ ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி’ ‘சட்டக்காரி’ பி என் மேனோனின் ‘பணி முடக்கு’ போன்ற படங்களிலும், தெலுங்கில் புகழ்ப் பெற்ற சங்கராபரணம் என்ற படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார்.

இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித் துவம். ஆதலால் தமிழ்த் திரையுலகம் இவரை கேமரா கவிஞர் என்று கொண்டாடியது. முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்கு னராக மாறினார். இவரது திரைப்படத்தில் விரியும் இயற்கையும் சித றும் ஒளியும் தனித் துவமானவையாகும்.

1977இல் பாலு மகேந்திராவின் முதல் படமான ‘கோகிலா’ என்ற படத்தை கன்னட மொழியில் இயக்கினார். இவர் ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977இல் வெளியா னது. 1978இல் தமிழில் இவரது முதல் படமான ‘அழியாத கோலங் கள்’ வெளியாகி வெற்றிபெற்றது.

இயக்குநர் மகேந்திரனின் முள்ளும் மலரும் உள்ளிட்ட பல படங் களுக்கு ஒளிப் பதிவு செய்தார் 15 படங்களுக்கு மேல் இயக்கினார். வீடு, சந்தியாராகம், தலைமுறை உள் ளிட்ட படங்கள் மறக்க முடியா தவைகள். ஓவியர் வீரசந்தானத்தை சந்தியா ராகம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி னார் பாலுமகேந்திரா. சிறந்த படைப்புக்கான விருதை பெற்றது சந்தியாராகம்.

நுண்ணுணர்வும் படைப்பாற்றலும்

படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுகிறார் “ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத் தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடயங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப் படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக் கொண்டிருக் கும். ஏனெனில் நீ அதிகம் எதிர் வினை புரிபவனாய் இருப்பாய்.

அதே போல் நல்ல படைப்பென்பது, பார்ப்பவரையும், கேட்ப வரையும் நெகிழ வைக்க வேண்டும். தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இரு நாட்களாவது உறக்கத்தை கெடுக்க வேண்டும், அது தான், நல்ல படைப்பு. மக்களை சார்ந்த கதைகள்தான் அவர்களிடத்தில் எளிதாய் போய்ச் சேரும். யார் தலையீடும் இல்லாமல், எந்த இடையூறுக்கும் இடமளிக்காமல், இயக்குநர் வழிகளில் விட்டால், அந்த சினிமா, நிச்சயம் வெற்றி பெறும்’’ என்கிறார்.

விருதுகள் :

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலுமகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ணவண்ணபூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந் தாராம் விருதுபெற்றது. இம் மூன்று துறைகளிலும் விருது பெற்ற ஒரே திரைப்பட கலைஞர் பாலுமகேந் திரா அவர்கள்.

அரசியல் :

இவர் சின்னஞ்சிறு வயதிலேயே இவர் ஊரில் (இலங்கை) இனக் கல வரம் தொடங்கி விட்டது. சிங்களர் களால் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட னர். அதையெல்லாம் இவர் சிறு வயதிலேயே அறிந்தவர். உணர்ச்சிக் பாவலர் காசிஆனந்தனும், இயக்கு நர் பாலுமகேந்திராவும் இலங்கை மட்டக்களப்பில் இருந்த போது பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். அதோடு மட்டுமன்றி சிறுவயதி லிருந்தே இருவரும் இணைபிரியா நண்பர்கள். கல்லூரி யில் இருவரும் ஒன்றாகத் தான் படித்தவர்கள். இலங்கையில் இருந்த காலங்களில் “தேனருவி’’ என்ற மாதழ் இதழை தொடங்கி இலக்கி யப் பணியாற் றியவர்.

அய்யா காசிஆனந்தன் சொல் வார் “நானும் பாலுமகேந்திராவும் எங்கள் ஊரில் இனக்கலவரம் பெரிதாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் எங்கள் வீட்டிலிருந்து நான் சைக்கிளை எடுத்துகொண்டு வருவேன், நான் ஓட்டுவேன் பின் இருக்கையில் பாலு மகேந்திரா இருப்பார். இருவரும் அப்படித்தான் ஒருநாள் சைக்கிளிலேயே சென்று இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடாது, கொடியேற் றக்கூடாது என்று புறக்கணிப்புப் போராட்டம் செய்தோம். அப் போது ஒரு கல்லூரி மட்டும் கல்லூரி திறந்து கொடியேற்றிருந் தது. இதை அறிந்த நானும் பாலுவும் சைக்கிளில் சென்றோம் பாலு மகேந்திரா சைக்கிளில் இருந்து கொண்டே கல்லூரியை நோக்கி கை குண்டை வீசினார் கல்லூரி சேதமடைந்து பலர் படுகாயம் அடைந்தனர். அதைப் பற்றி நாங் கள் கவலை படவில்லை.’’ என்றார்.

இலங்கையில் பிறந்த தமிழர் பாலு மகேந்திரா என்றாலும் அவர் ஈழப்பிரச்னை பற்றி எதையும் அவர் தன் படைப்புகளில் பதிவு செய்ய வில்லையே என்ற விமர்சனம் நமக்கு உண்டு. அதற்கு பாலு மகேந் திரா சொன்ன பதில்… பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. ஆனால், அதிகபட்ச நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய விடயம் இது. வியாபாரத்தைத் தாண்டியது. படைப்பாளிகள் தயார் தான். அப்படி ஒரு படத்தை தாங்கும் தயாரிப்பாளர் எங்கே என்றார்.

ஆனாலும் இனக்கொடுமை யிருந்து மீள இன உணர்ச்சியாள ராய் இருந்தார். நான் ஒருமுறை சந்தித்து பேசுகிற போது அவர் சொன்னார் “நம்பிக்கையோடு இருப்போம். தன்னம் பிக்கை ஒளிதான் ஒருநாள் விடியலை தரும் என்றார்.

சினிமா என்பது நம் வாழ்வியல் ஒவ்வொன்றோடும் ஒவ்வொரு புள்ளியிலும் இணைந்துதான் செயல்படுகிறது. பாடல்கள், ஓவியங்கள், பேச்சுமொழி, இவை அனைத்துமே ஒன்றோடொன்று இணைந்தே செயல்படுகிறது. மொழியில்லாமல் சினிமா இல்லை.

பாலுமகேந்திரா அவர்கள் பல மேடைகள் தொடர்ந்து ஒரு கருத்தை பதிவு செய்வார் .

அதாவது தமிழ் படைப்புகளை பாதுகாத்து வைக்ககூடிய சேமிப் பகம் எதுவுமே நம்மிடம் இல்லை. நான் நேரடியாக பாதிக்கப்பட்ட வன். என் “வீடு, சந்தியா ராகம்” ஆகிய படங்களின் நகல் என்னிடம் இல்லை. நான் என்ன செய்ய முடியும். புனே சேமிப்பகத்தை பி.கே. நாயர் என்பர் உருவாக்கினார். ஆனால் இங்கு இல்லை.

“நம் அன்றாட வாழ்வினில் அரசியல் என்பது முற்று முழுதாய் பதிந்து போயுள்ளது. ஒரு நடிகனின் பேச்சு ஒரு அரசியல் விளைவையே மாற்றிப் போட்டது. சினிமா என் பது என்ன? அது என்ன கெட்ட வார்த்தையா? இல்லை. அதுஒரு அழகிய வார்த்தை. நாம்தான் அதை கெட்டதாக்கி வைத்திருக்கிறோம். நல்ல சினிமா வேண்டும் என்றும், நல்ல சினிமா பார்க்க வேண்டு மென்றும் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பது நமக்கு புரியவில்லை. சினிமாவை பள்ளிகளில் பயிற்றுவியுங்கள் என்றால் என்ன அர்த்தம்? நான் சினிமா எடுக்க கற்றுத்தர சொல்கிறேனா? இல்லவே இல்லை.

சினிமா ரசனை என்றால் என்ன வென்பதை அறிமுகப் படுத்துங்கள். அதைத்தான் வேண்டுகிறேன். நச்சு சினிமா என்றால் என்ன? நல்ல சினிமா என்றால் என்னவென்பதை அப்பொழுது தான் அவர்களால் புரிந்துகொள்ள முடியும். சினிமா நயம் என்பது முக்கியம். நான் படம் பார்க்க சுமார் 30 மைல் வரை போனதாய் ஞாபகம். ஆனால் இப்போது சிடிசன் கேன் என்ற திரைப்படம் வெறும் காய்கறி களுக்கு மத்தியில் ஒரு சுமாரான பல்பொருள் அங்காடியில் கிடைக் கிறது. எவ்வளவு ஆரோக்கியமா னது இந்த விடயம். சினிமாவின் மொழியையும், அதன் இலக்கியத் தையும் என்னால் கற்றுத் தரமுடி யும் என் மாணவர்களுக்கு. நீ என் னருகில் இருக்கும் வரையும் தான் என்னால் கற்றுத்தர முடியும். நீ என்னருகில் இருக்கும் வரை நல்ல சினிமாவுக்கான பாதையை நோக்கி உந்தி தள்ளுவேன்.

நீ ஒரு படைப்பை உருவாக்கு கிறாய் நான் சில வேளைகளில் உனக்கு முத்தமும் தரலாம், செருப் பாலும் அடிக்கலாம். என்னிடம் நீ இருக்கும் வரை நல்ல சினிமாவுக் கான நமது பயணம் தொடரும். நான் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்போது நான் கற்றுக் கொள்கிறேன். என்னை புதுப்பித் துக் கொள்கிறேன்.’’என்கிறார் பாலு.

இலக்கியம் எப்படி சினிமாவாய் மாறுகிறது. அது ஆத்மாவா? இல்லை உருவமா? சிறுகதை என் னுள் ஏற்படுத்திய அதிர்வு ஆத் மாவா? உருவமா?. அழிவது உடல் தான். ஆனால் ஆத்மா பிறந்து கொண்டே இருக்கும். ஒரு பிறவி யில் சிறுகதையாய் இருப்பது, அடுத்த பிறவியில் குறும்படமாய் மாறுகிறது. ஒரு பிறவியில் பாட்டி யின் கழுத்தில் இருக்ககூடிய காசு மாலை அடுத்த பிறவியில் அவளின் பேத்தியின் கழுத்தில் புதிய வகை நெக்ளசாக இருக்கிறது. ஆனால் தங்கம் அதே தங்கம்தான். வடிவம் மட்டும்தான் மாறுகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தை நான் மதிக்கிறேன். தமிழ் ஆளுமையை மதிக்கிறேன். நீ எழுதும் ஒரு வரியை நான் படமாக்க எனக்கு மூன்று சீகுன்ஸ் தேவைப்படலாம். நீ பக்கம் பக்கமாக எழுதிய ஒரு காட்சியை நான் ஒரு ஷாடில் படமாக்கலாம். சினிமா மொழி வேறு, தமிழ் மொழி வேறு என்பதில்லை நம் மொழியின் ஆளுமையை காட்சி வடிவில் சொல்லுகிறபோது இன்னும் அது கூடுதலாய் சென்றடையும் என்கிறேன்..

மேற்குறிப்பிட்ட கருத்தின் சாரத் தோடுதான் இயக்குநர் பாலுமகேந்திரா பல மேடைகளில் தன் கருத்தை பதிவு செய்வார்.

தமிழின உரிமை சார்ந்த அரங் கக் கூட்டங்கள், நூல்கள் வெளியீடு, குறுப்பட இயக்குநர்களை ஊக்கப் படுத்தும் நிகழ்வு என பலவற்றில் பங்கேற்று தன் இன வழிப்பட்ட கருத்தியலை பதிவு செய்திருக் கிறார்.. இவரது இறுதிப்படமான “தலை முறை’’ தனது இறுதி கனவை செதுக்கி வைத்தது போல இருந்தது. மொழி ஒரு இனத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்பதை மிக ஆழமாக சொல்லப்பட்ட படம் அது!. தமிழை யாரும் மறந்து விடாதீர்கள்! என அவரே கதாப்பாத்திரம் ஏற்று தமிழினத்திற்காக அறைகூவல் விட்டுச் சென்ற படம் ”தலைமுறை’’ யாகும்.

ஒரு படைப்பாளி அடுத்த தலை முறையை உருவாக்கிச் சென்றிருக்கி றார் என்றால் அது பாலுமகேந்திரா தான் என்றால் அது மிகை யாகது. தனது திரைப்பட்டறை பயிற்சி முகாமிலிருந்து தமிழ்த் திரை உலகிற்கு எண்ணற்ற படைப் பாளிகளை உருவாக்கித் தந்து விட்டு சென்றிருக்கிறார். அவர் உரு வாக்கிய படைப்பாளிகள் (பாலா, சீனு இராமசாமி, வெற்றிமாறன் உள்ளிட்ட பலர்) இன்று தமிழ்ச் சமூகம் சார்ந்த நல்லப் படைப்புகளை வெளிக்கொணர்கின்றனர்.

செல்லுலாய்டு பிம்பம் இம் மண்ணில் இருக்கும் வரை பாலு மகேந்திரா எனும் ஒளி அணை யாமல் இருந்து கொண்டே தான் இருக்கும்.. புதிய ஒளியை செதுக்கிய உளியாக இருந்த பாலுமகேந்திராவின் மறைவு தமிழினத்திற்கும், திரைத்துறைக்கும் ஓர் பேரிழப் பாகும். படைப்பாளிகள் மறைவ தில்லை. தனது கனவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

(தமிழர் கண்ணோட்டம் மார்ச் 1, 2014 இதழில் வெளியானது)

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More