கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள்

கோலிஃப்ளவர் – 1

ப்ரட் துகள்கள் – தேவையான அளவு

தயிர் – 1/4 கப்

மைதா – 3 டீஸ்பூன்

சில்லி சோஸ் – 2 டீஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிக்சட் ஹெர்ப்ஸ் – 1 டீஸ்பூன்

செய்முறை

கோலிஃப்ளவரை சின்ன சின்ன பூக்களாக வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தனியே வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ப்ரட் துகள்களை தவிர மற்ற அனைத்தையும் கலந்துக் கொள்ளவும்.

கோலிஃப்ளவர் பூக்களை தயிர் கலவையில் நனைத்து, ப்ரட் துகள்களில் பிரட்டி எண்ணெயில் பொரிக்கவும். சூடாக பரிமாறவும்.

நன்றி | வீரகேசரி

ஆசிரியர்