0
கிரிக்கெட் உலகில் முதல் பெண் நடுவராக நியூசிலாந்தை சேர்ந்த கேத்தி கிராஸ் ஐ.சி.சி. யினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தின் போதே கேத்தி கிராஸை பெண் நடுவராக அறிவித்துள்ளது.
நடப்பாண்டிற்கான நடுவர்கள் பட்டியல் ஐ.சி.சி. யினால் வெளியிடப்பட்டது. குறித்த பட்டியலில் கேத்தி கிராஸின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் ஐ.சி.சி. கிரிக்கெட் லீக் போட்டிகளில் நடுவராக பணியாற்றுவார்.
இதேவேளை, ஐ.சி.சி. தன்னை நடுவராக அங்கீகரித்திருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்று கேத்தி கிராஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.