தொடரும் கதைகள் | மாணவியுடன் குடும்பம் நடத்திய சாரதி கைதுதொடரும் கதைகள் | மாணவியுடன் குடும்பம் நடத்திய சாரதி கைது

 

சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குடும்ப நடத்திய 21 வயது இளைஞன் ஒருவரை கொடிகாமம் பகுதியில் வைத்து  கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.   இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவது-   ஆவரங்கால் பகுதியினைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி முச்சக்கரவண்டியில் பாடசாலைக்குச் சென்று வந்த நிலையில் குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியான இளைஞனும் சிறுமியும்  காதல் வயப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (19)  குறித்த சிறுமி தனது புத்தகப் பையினுள் உடைகளையும் எடுத்துக்கொண்டு முச்சக்கரவண்டி சாரதியுடன் சென்றுள்ளார்.   பாடசாலைக்கு சென்ற தமது மகளைக் காணவில்லையென சிறுமியின் பெற்றோர் திங்கட்கிழமை (19) மாலை அச்சுவேலிப் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார்  கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சிறுமியினை மீட்டதுடன், குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.   இதேவேளை மீட்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞனைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஆசிரியர்