அன்று
உன் வரவால் இல்லமே பிரகாசமானது
அந்த சூரியனைப் போல!
உன் அணைப்பால் இதயமே குளிர்ந்தது
அந்தச் சந்திரனைப் போல!
உன் கலீர்ச்சிரிப்பு எங்கும் பட்டுத் தெறித்தது
அந்த நட்சத்திரங்களைப் போல!
உன் மழலையின் ஓசை செவியை வருடியது
அந்த தென்றலைப் போல!
உன் குறும்புத்தனத்தில் பல வர்ணஜாலம் தெரிந்தது
அந்த வானவில்லைப் போல!
உன்னை என் பொக்கிஷமாய் நெஞ்சில் சுமந்தேன்
ஒரு புதையலைப் போல!
மகனே!
இன்று நீ என்னை
சுமையாய் நினைத்ததினால் கண்ணீர் கொட்டுகிறது
அந்த அருவியைப் போல!
உன்னைப் பிரிந்ததினால் மனம் வேதனையால் எரிகிறது
அந்த தீயைப் போல!
என் உயிர்மூச்சு எப்போதும் உன்னையே சுற்றிச் சுழல்கிறது
அந்த காற்றைப் போல!
உன் மீது நான் கொண்ட அன்பை அளந்திட முடியாது
அந்த வானத்தைப் போல!
உன் வெறுப்பையும் பிரிதலையும் என்றும் தாங்கிக் கொள்வேன்
அந்த பூமியைப் போல!
நன்றி : விமல் பரம் – அவுஸ்திரேலியா | தினக்குரல்