அதிசயம் செய்யும் வெள்ளரிக்காய்!!

இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை அன்றாடம் செய்கிறது.

மேலும் தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாலட்டாகவோ, அல்லது அப்படியே சாப்பிட்டாலோ ஏற்படும் நன்மைகள் ஏராளம்.

சருமத்திற்கு ஆரோக்கியம்
வெள்ளரிக்காயில் 95% நீர்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் இழுத்து சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க
அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மலச்சிக்கல்
மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

வாய் துர் நாற்றம்
வாய் துர் நாற்றத்தை போக்க, ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். 30 நொடிகள் வரை வைக்கவும். சக்திவாய்ந்த பேக்டீரியா எதிர்ப்புத் திறன் வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர் நாற்றத்தை போக்கும்.

உடல் எடை குறைக்க
தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை பார்ப்பீர்கள். கொழுப்பு செல்களை கரைக்கும்.இதனால் வயிற்றிலுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.

வயிற்றுப்புண்
வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.

சிறுநீரகம் ஆரோக்கியம்
உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

கீல்வாதம்
வெள்ளரிக்காயை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு
கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படுவதுடன், வயிற்றில் வலியையும் ஏற்படுத்தும்.

வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொண்டால், இதய அழுத்தம், ரத்த நாளங்களில் அடைப்பு, சுவாசப் பிரச்சனை மற்றும் அடிக்கடி கடுமையான தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஆசிரியர்