Monday, January 25, 2021

இதையும் படிங்க

அழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் | நிலாந்தன்

கடந்த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது.யாழ்...

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது!

கொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...

வாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி!

வாழைச்சேன பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் வேண்டுகோளையேற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின்...

இளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை கட்டியெழுப்பிய சுவாமி விவேகானந்தர்!

இன்று 158 வது ஜனன தினம் உலகளாவிய ரீதியில் சேவையாற்றி வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உலகில் அவதரித்து இன்றுடன்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்

மாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள்...

ஆசிரியர்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 10 | பத்மநாபன் மகாலிங்கம்

பெரிய பரந்தன் காடாக இருந்த போது பனை மரம் எப்படி வந்தது? என்று பலர் கேட்டார்கள். பெரிய பரந்தன் காட்டை வெட்டும் போது பனை மரங்கள் இருந்தது உண்மை. ஆயினும் ஒரு சிறிய ஆய்வு செய்தேன்.

1. மூன்று கிராமங்களுக்கு அருகே காடாக இருந்த சிவநகர் இப்போது வளர்ச்சியடைந்த கிராமமாக உள்ளது. அது காடாக இருந்த போது காட்டில் சிதிலமடைந்த செங்கல் கட்டிடம் காணப்பட்டது. வேலாயுதசுவாமி என்னும் சாமியார் சிவநகர் குளத்தின் அருகே ஒரு பிள்ளையார் கோவில் கட்ட சென்ற போது ஒரு மாடு மேய்க்கும் இளைஞன் அதனை கண்டு அவருக்கு சொன்னான். சாமியுடன் வடிவேல்சாமியும் சென்று பார்த்த பொழுது அங்கே அந்த சிதிலமடைந்த செங்கல் கட்டிடத்தினுள்ளே ஒரு சிவலிங்கத்தின் சிலையை கண்டனர். அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தான் இப்போதைய உருத்திரபுரீஸ்வரன் கோவிலை கட்டியுள்ளார்கள். ஆகவே முன்னரும் மக்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள்.

2. தொண்ணூறுகளில் பல்கலைக் கழக பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் பல்கலைக் கழக மாணவர்களுடன் சென்று செருக்கன், குஞ்சுப்பரந்தன் அருகே ஒரு முதுமக்கள் தாழியை கண்டெடுத்தார். மண்ணால் செய்யப்பட்ட பெரிய சாடி போன்ற தாழியினுள்ளே இறந்தவர்களின் உடலையும் உடமைகளையும் வைத்து ஒரு மூடியினால் மூடி மண்ணினடியில் தாழ்ப்பார்கள். அது முதுமக்கள் தாழி எனப்படும். மக்கள் பழங்காலத்தில் அங்கு வாழ்ந்ததால் தான் பனை மரங்கள் அங்கு வந்திருக்க வேண்டும்.

.

கணபதி வேலை முடிந்ததும் எருதுகளை தந்தையாருடன் சேர்ந்து குளிப்பாட்டுவான். ஆறுமுகத்தார் அவன் மீது காட்டிய அன்பு அவனை வேறு விதமாக சிந்திக்க விடவில்லை. ஆறுமுகத்தாரை “ஐயா” என்று தம்பையரை அழைத்தது போலவே அழைத்தான்.

ஆறுமுகத்தார் கணபதி, தன்னை ஒத்த சிறுவர்களுடன் விளையாட முடியவில்லையே என்று ஏங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இரவில் அவனுடன் ‘நாயும் புலியும்’, ‘தாயம்’ முதலிய விளையாட்டுகளை விளையாடுவார். அவனுக்கு உப கதைகளைச் சொல்லுவார். ‘முருகன்’ மாம்பழத்திற்காக ‘பிள்ளையாருடன்’ போட்டி போட்ட கதையை’ கூறுவார். ‘காத்தான் கூத்தை’ பாடிக் காட்டுவார்.

பெரிய பரந்தன் மக்கள் தாடியுடனும், மீசையுடனும் வேடர்கள் போலவே இருந்து விட்டு, ஊர் போகும் சமயங்களில் தலைமுடியை வெட்டி, முகம் வழித்து வருவார்கள். அவர்களது தலையையும் முகத்தையும் விசாலாட்சி அவதானித்தாள். ஆறுமுகத்தாரிடம் “பெரிய பரந்தன் கிராமத்திற்கு என ஒரு முடி வெட்டுபவரை ஒழுங்கு செய்தால் என்ன?” என்று கேட்டாள். ஆறுமுகத்தார் “முத்தரிடமும் ஏனையவர்களுடனும் கதைத்த பின்னர் முடிவு செய்வோம்” என்றார். அவர்களும் சம்மதித்து ஆறுமுகத்தாரிடம் பொறுப்பைக் கொடுத்தனர்.

ஆறுமுகத்தாரும் ஒரு உறவினருடன் ஊர் சென்று, மட்டுவிலிலிருந்து மாதம் ஒருமுறை வந்து, ஒரு கிழமை நின்று எல்லோருக்கும் முடி வெட்டி விட்டு திரும்பிப் போகும் ஒழுங்குடன் ஒரு வயோதிபரை அழைத்து வந்தார்.

அவருக்கு போகத்திற்குப் போகம் எல்லோரும் நெல்மணிகளையே கூலியாக கொடுப்பது என்று பேசியிருந்தார். அந்த வயோதிபரும் ஊர் பொறுப்புகளை மகன்மாரிடம் பகிர்ந்து கொடுத்துவிட்டு வந்திருந்தார்.

அவருக்கு காலை தேனீரும் உணவும் விசாலாட்சி கொடுப்பாள். மதியமும் இரவும் முடி வெட்டச் செல்லும் இடங்களில் கொடுப்பார்கள். இரவு வந்து தியாகர் வயலில் படுத்திருப்பார். அவருக்கு பல உப கதைகள் தெரிந்திருந்தது. அவர் வந்து நிற்கும் நாட்களில் கதை சொல்லும் பொறுப்பு அவருடையது. அவரிடம் கதை கேட்டபடி கணபதி உறங்கி விடுவான். ஆறுமுகத்தார் வந்து அவனை தூக்கி சென்று தங்களுடன் படுக்க வைப்பார்.

காலபோக விதைப்புக்கு உரிய காலம் வந்தது. பிள்ளையார் கோவில் முன்பாக பெரியபரந்தன் மக்கள் யாவரும் ஒன்று கூடினர். வழக்கம் போல முத்தரும் ஆறுமுகத்தாரும் தலமை தாங்கினார்கள். யார் யாருடைய காணிகளில் பள்ளக் காணிகள் உண்டு என யோசிக்கப்பட்டது. அந்த பள்ளப் பகுதிகளை முதல் விதைப்பது என்று தீர்மானித்தார்கள். முத்தரின் காணியிலும் ஆறுமுகத்தாரின் காணியிலும் பள்ளங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் தங்கள் காணிகளில் இருந்த பள்ள பகுதிகளை மற்றவர்களின் பள்ளங்கள் விதைத்த பின்னர் விதைப்பது என்று முடிவு செய்தனர்.

அடுத்து எல்லோர் காணிகளிலும் உள்ள நடுத்தர காணிகளை விதைப்பது என்றும் பேசிக் கொண்டனர். யாவரினதும் மேட்டுக் காணிகளை இறுதியில் விதைக்கத் தீர்மானித்தார்கள். இப்போது தம்பிமாரும் கூட்டங்களில் கலந்து மற்றவர்கள் எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டனர். விதைப்பு முடியும் மட்டும் எல்லோருக்கும் மதியம் சாப்பாட்டை, விசாலாட்சி தானே சமைத்து தருவதாகவும், தேங்காய் திருவுவதற்கு மட்டும் யாரேனும் ஒருவர் உதவி செய்தால் போதும் என்றும் சொல்லியிருந்தார்.

ஒரு நல்ல நாளில் விதைப்பு ஆரம்பமாகியது. எல்லோரும் எருதுகளுடனும் கலப்பைகளுடனும் முதலில் விதைப்பிற்கு தெரிவு செய்யப்பட்டவரின் வயலுக்கு காலை வேளையில் வந்து சேர்ந்தனர். இருவர் விதை கடகங்களில் நெல் நிரப்பிக்கொண்டு, பிள்ளையார் கோவில் இருக்கும் திசையை பார்த்து கும்பிட்ட பின் விதைக்க ஆரம்பித்தனர்.

விதைப்பது என்பது ஒரு கலை. வயலின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே அளவு நெல் விழுதல் வேண்டும். அவர்களின் கடகத்தில் நெல் முடிய முடிய, சிறியதொரு கடகத்தில் நெல் எடுத்துக் கொண்டு ஓடி ஓடிச் சென்று கணபதி அவற்றை நிரப்பி விட்டான்.

ஒவ்வொரு வயலிலும் நெல் விதைத்தவுடன் அந்த வயலை உழத் தொடங்கினர். இவ்வாறு முதலில் ஒவ்வொரு முறை உழுதனர். எல்லா வயல்களும் விதைத்து, உழுத பின்னர் மறுபடியும் அந்த வயல்களை மறுத்து உழுதனர். முன்னர் உழுத திசைக்கு செங்குத்தாக உழுவதை ‘மறுத்தல்’ என்று கூறுவார்கள்.

மறுத்து உழுவதனால் கமக்காரனுக்கு மூன்று விதமான நன்மைகள் கிடைக்கும். முதல் உழவில் மாடுகள் குழப்படி செய்தால் சில இடங்களில் உழுபடாத கள்ள இடைவெளிகள் ஏற்பட்டு விடும். மறுத்து உழுத போது அந்த இடமும் உழுபட்டு விடும். மறுத்து உழும் போது விதைத்த நெல் எல்லா இடங்களுக்கும் சீராக பரவி விடும். இரண்டாம் முறை உழுவதனால் மண் நன்கு உழப்பட்டு நெற்பயிர் வேரோடுவதற்கு ஏற்ப மண் இலகுவாகும் விடும்.

எருது பூட்டிய கலப்பைகளால் வயல்களின் மூலைகளை உழவு செய்ய முடியாது. ஆகையால் நெல்லை விதைத்தவர்கள், ஒவ்வொரு வயல்களினதும் நான்கு மூலைகளிலும் மேலும் சிறிது நெல்மணிகளை தூவி மண்வெட்டியினால் கொத்தி விடுவார்கள். விதைத்து முடிந்ததும் கணபதி தாயாருக்கு சமையல் வேலையில் உதவுவதற்காக ‘தியாகர் வயல்’ நோக்கி ஓடிவிடுவான். தாயாருக்கு பூவலில் தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பான். கிராமத்தவர்கள் முழுப் பேரும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். எல்லோர் வயல்களையும் தமது வயல்கள் போல எண்ணி வேலைகளில் பங்கு பற்றுவார்கள்.

சமையல் முடிந்ததும் விசாலாட்சி ஒரு பெரிய மூடல் பெட்டியில் சோற்றைப் போட்டு மூடுவாள். இரண்டு சிறிய மூடல் பெட்டிகளில் கறிகளைப் போட்டு மூடி, அந்த இரு மூடல் பெட்டிகளையும் ஒரு பனை ஓலைப் பையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பாள். மூன்று, சிரட்டைகளினால் செய்த அகப்பைகளையும் பையினுள்ளே வைப்பாள். சோற்று பெட்டியை, தலையில் ஒரு சேலைத்துணியினால் செய்த திருகணை  மேல் வைத்து ஒரு கையால் பிடித்துக் கொள்வாள். கணபதி கறிகள் உள்ள பனை ஓலைப் பையை கையில் தூக்கிக் கொள்வான். இருவரும் விதைப்பு நடக்கும் இடம் நோக்கி நடப்பார்கள். கணபதி பாரம் தாங்காமல் அடிக்கடி கைகளை மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு நடப்பான்.

விசாலாட்சி ‘தியாகர் வயலை’ விட்டு வருவதைக் கண்டதும், முத்தர் கத்தியை எடுத்துக் கொண்டு பனங்கூடலுக்கு செல்வார். வடலிகளில் குருத்தோலைகளாகப் பார்த்து வெட்டி, கொண்டு வருவார். வந்திருந்து ‘தட்டுவங்கள்’ கோல தொடங்குவார். மறக்காமல் கணபதிக்கு என்று ஒரு சிறிய ‘தட்டுவமும்’ கோலுவார். ஒருவர் பானையையும் மற்றொருவர் ‘தட்டுவங்களையும்’ தூக்கிக் கொண்டு அண்மையிலுள்ள பூவலுக்கு செல்வார்கள். தட்டுவங்களை கழுவிய பின்னர் பானையில் நீர் நிரப்பிக் கொண்டு திரும்பி வருவார்கள்.

கணபதி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தட்டுவம் கொடுத்த பின், தனது சிறிய தட்டுவத்தை எடுத்துக் கொண்டு வருவான்.

விசாலாட்சி ஒரு வசதியான இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு ஒவ்வொருவராக போக, சோற்றையும் கறிகளையும் அகப்பைகளால் போட்டு விடுவாள். அவர்கள் தமக்கு வசதியான இடத்தில் போயிருந்து சாப்பிடுவார்கள். கணபதிக்கு போட்ட பின்பே ஆறுமுகத்தார் தனக்கு வாங்கிக் கொள்வார். தமிழன் கண்டு பிடித்த ஒருநாள் பாத்திரங்கள் இரண்டு. ஒன்று வாழை இலை, சில சமயங்களில் தாமரை இலை. மற்றது பனை ஓலை ‘தட்டுவம்’. பறங்கிகளைப் (Burghers) போல ஒரே தட்டை (Plates) பல காலங்களுக்கு கழுவி கழுவி பாவிக்கும் தேவை இல்லை.

அதிகம் பேர் சாப்பிட வேண்டிய சந்தர்ப்பத்தில் பயன்படும் பனையோலையால் செய்யப்பட்ட தட்டுவம்

விதைப்பு முடியும் மட்டும் விசாலாட்சியே சமைத்தாள். இவ்வளவு காலமும் விதைப்பு காலத்தில் ஆண்களின் சமையலை சாப்பிட்டவர்களுக்கு விசாலாட்சியின் சாப்பாடு அமிர்தமாக இருந்தது. யாவரும் உறவினர்கள் என்பதனால் ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் எதனையும் எதிர் பார்க்கவில்லை. ஊருக்கு மாறி மாறி சென்று வந்த உறவினர்கள், தேங்காய்களையும் காய் கறிகளையும் கொண்டு வந்து கொடுத்தனர். வேண்டாம் என்று மறுத்த போதும் முத்தர் வற்புறுத்தி அரிசி கொண்டு வந்து கொடுத்தார்.

நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கின. அந்த முறை மழை அளவாக பெய்தது. பயிர்கள் வளரத் தொடங்கின. இப்பொழுது வயல்களில் நீர் சேர்ந்தது. நீர் உயர உயர பயிர்களும் உயர்ந்து வளர்ந்தன. இப்போது பயிர்களை வெட்ட’ பாலாமைகளும்’, ‘சிராய்’ ஆமைகளும் வரத் தொடங்கின.

“சிராய் ஆமைகளையும்,பாலாமைகளையும் பிடித்து வெட்ட வேண்டும்.” என்று ஆறுமுகத்தார் கூறினார். உடனே கணபதி “வேண்டாம் ஐயா, ஆமைகளைப் பிடித்து சாக்கில் போட்டு, காட்டில் கொண்டு போய் விடுவோம்” என்றான். விசாலாட்சியும் “கணபதி சொல்லுவது தான் சரி. வீணாக கொல்லுவது பாவம்” என்றாள். இருவரும் சொல்வதைத் கேட்ட ஆறுமுகத்தாரும் சம்மதித்தார்.

ஆறுமுகத்தாரின் கதையைக் கேட்ட முத்தரும் மற்றவர்களும் தாங்களும் சாக்கில் போட்டுக் காட்டில் விடுவதென தீர்மானித்தார்கள். இரண்டு மூன்று வருடங்களாக அந்த ஆமைகளை வெட்டி தாட்டு வந்த மக்கள், கணபதியின் கருத்தைக் கேட்டு அந்த செயலைச் செய்யாது விட்டனர். கணபதி தனது கதைகளாலும், செயல்களாலும் தம்பையரை நினைவூட்டிக் கொண்டிருந்தான். அந்த வருடம் ஆமைகள் பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டன.

அந்த கால போகத்தின் போது பன்றிக்காவல், யானைக் காவலுக்கு கணபதியையும் ஆறுமுகத்தார் கூட்டிச் சென்றார். கணபதியும் வயல் வேலை முழுவதையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆறுமுகத்தார் விரும்பினார். அந்த நாட்களில் தம்பிமாரில் ஒருவர் விசாலாட்சிக்கு துணையாக வந்து நின்றார். மற்றவர் எல்லா கிராம மக்களுடனும் சேர்ந்து காவல் கடமைக்கு சென்றார். தியாகர் வயல் காட்டின் எல்லையில் இருந்தது. அதனால் கணபதியும் ஆறுமுகத்தாரும் பட்டமரக் கட்டைகளை தூக்கி வந்து பல இடங்களில் குவித்து வைத்தனர்.

இரவு வந்ததும் அந்த குவியலைக் கொழுத்தி விட்டனர். அவை விடியும் வரை எரிந்து, தணல் ஆக இருக்கும். விலங்குகள் அவற்றை விட்டு விலகி ஓடி விடும். ஆனால் யானைகளும் பன்றிகளும் கூட்டமாக வேறு வழியால் வயலுக்குள் புகுந்து விடும். தாரை தப்பட்டை அடித்தும், தீப்பந்தங்களைக் காட்டியும், கூக்குரல் இட்டும் அவற்றைக் கலைத்தார்கள்.

கிராமத்தவர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து பல இடங்களில் நின்று கலைத்தார்கள். யானைகள் இலகுவில் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டா. கலைத்தவுடன் காட்டினுள் சென்று சற்று தூரத்தில் முகாமிட்டு விடுவினம். அவை நின்ற படியே நித்திரையும் கொள்ளுவினம். தலைவனான ஆண் யானை சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும். பகலில் ஈச்சமரங்களை பிய்த்து சாப்பிடுவினம். மறுபடியும் மறுபடியும் இரவில் வயலினிலுள்ளே போக பார்ப்பினம்.

பெரிய பரந்தன் மக்களும் விடாது போராடினார்கள். கடைசியில் யானையிறவில் இறங்கி வடமராட்சி கிழக்கிற்கு போவினம். அங்கே நீர் நிலைகளின் அருகே அவைகளுக்கு மிகவும் பிடித்தமான பிரப்பம் மரங்கள் காத்திருக்கும். பிரப்பம் மரங்களின் தண்டுப் பகுதியை பிரித்து உள்ளே இருக்கும் குருத்தை சாப்பிடுவதை யானைகள் பெரிதும் விரும்பின. அந்த வருடம் யானைகளும் பன்றிகளும் பெரிய பரந்தனில் பயிர்களை அழிக்கவில்லை.

வயல்களுக்கு இயற்கை பசளைகளான எரு, காய்த்த  இலை, குழை என்பனவே போடப்பட்டன. ‘பச்சைப் பெருமாள்’, ‘சீனட்டி’, ‘முருங்கைக் காயன்’, ‘மொட்டைக் கறுப்பன்’ முதலிய பல வகை நெற்கள் விதைக்கப்பட்டன. ‘சீனட்டி’ என்பது குறைந்த கால வயதுடைய நெல். மேட்டுக் காரணிகளுக்கு இதனை விதைப்பார்கள். ‘மொட்டைக் கறுப்பன்’ நெல் கூடிய கால வயதுடையது. வரட்சியை தாங்க கூடியது. இவற்றை நீர் வளம் குறைந்த, வானம் பார்த்த பூமிகளிலேயே விதைப்பார்கள். பூனகரியில் பரவலாக ‘மொட்டைக்கறுப்பன்’ நெல் விதைத்தனர். பூனகரியில் விளைந்த ‘மொட்டைக் கறுப்பன்’ நெல்லிலிருந்து பெறப்படும் அரிசியில் சமைத்த சோறு, காய்ச்சிய கஞ்சி என்பன மிகவும் சுவையானவை. அந்த அரிசியை இடித்து பெறப்படும் மாவிலிருந்து அவிக்கப் படும் ‘பிட்டு’ அதிக சுவையுள்ளது.

பயிர்கள் ஓரளவு வளர்ந்த போது களைகளைப் பிடுங்க வேண்டும். எல்லோரும் எல்லோரினதும் வயல்களையும் சுற்றிப் பார்ப்பார்கள். ஒவ்வொருவரின் வயல்களிலும் சில வயல்களில் மிக அதிக அளவில் புற்கள், களைகள் காணப்படும். நெல் வயலில் நெல்லை விட, முளைக்கும் வேறு பயிர்கள் களைகள் எனப்படும்.

களைகள் அதிகமுள்ள வயல்களில் களை பிடுங்கல் கூட்டாக நடை பெறும். களைகளைப் பிடுங்கும் போது வயல்கள் உழக்கப்படும். இவ்வாறு உழக்குவதால் பயிர்கள் மேலும் செழித்து வளரும். எல்லோருமாகச் சேர்ந்து எல்லோர் வயல்களிலும் உள்ள களைகளைப் பிடுங்கி முடித்து விட்டார்கள். களைகள் பிடுங்கிய வயல்களில் சில இடங்களில் பயிர்கள் அடர்த்தியாகவும், சில இடங்களில் ஐதாகவும் காணப்படும். அடர்த்தியாக உள்ள இடத்தில் உள்ள பயிர்களை களைந்து பிடுங்கி, ஐதான இடத்தில் நட்டு விடுவார்கள்.

களை பிடுங்குபவர்களுக்கும் விசாலாட்சியே மதியம் சாப்பாடு கொடுத்தாள். அனைவரும் உறவினர்கள்.  தியாகர் வயலை தாய் மனையாக நினைப்பவர்கள். இப்போது அவர்கள் வேலை செய்து களைத்திருக்கும் போது, வயிறாற உணவளித்த விசாலாட்சியை தமது தாயாக மதித்தார்கள்.

களை பிடுங்கும் போது வயது வேறுபாடின்றி எல்லோரும் பாட்டு பாடுவார்கள். நல்ல நாட்டார் பாடல்கள் பலவற்றை அவர்கள் பாடுவார்கள். கூட்டமாக பாடும் போது களைப்பு வருவதில்லை. முத்தர் அம்மான் குரல் வளம் உள்ளவர். அவர் பல பாடல்களையும் அறிந்து வைத்திருந்தார். அவர் தனியே பாடும் போது எல்லோரும் அதனை மிகவும் ரசிப்பார்கள். உறவு முறை வேறாக இருந்தாலும், எல்லோரும் முத்தரை ‘அம்மான்’ என்றே மதிப்புடன் அழைத்தனர்.

மனைவிமாரை பிரிந்திருந்த இளைஞர்கள், இணையை பிரிந்திருக்கும் துயரங்கள் கூறும் பாடல்களைப் பாடுவார்கள். விசாலாட்சிக்கு கேட்கக் கூடியதாக பாடமாட்டார்கள். ஆனால் கணபதி கேட்டு விடுவான். தாயாரிடம் போய் “அம்மா, ஏன் அப்படி பாடுகின்றார்கள்?” என்று கேட்பான். விசாலாட்சி அவனிடம் எதையோ சொல்லி சமாளித்து விடுவாள். ஆறுமுகத்தார் வந்ததும் “இவர்கள் ஏன் மனைவிகளை ஊரில் விட்டு விட்டு வந்து இப்படி கஷ்டப்பட வேணும்?” என்று கேட்பாள். “இவங்களில் சில பேருக்கு இந்த மாரி முடிந்து, தை மாதம் பிறக்க பெண்சாதிகளை கூட்டி வரும் எண்ணம் இருக்கு” என்று ஆறுமுகத்தார் பதில் சொல்வார்.

‘கிடைச்சி’, ‘கோரை’, ‘கோழிச்சூடன்’ முதலியவை பொதுவாக காணப்படும் களைகள். கிடைச்சி மரமாக வளர்ந்து பசளையை உறிஞ்சிவிடும். கோரை பெரிதாக பூக்கள் பூத்து நெற்பயிருக்கு சூரிய ஒளி கிடைக்காது தடுத்துவிடும். நெற்பயிருக்கும் இளம் கோழிச்சூடன் புல்லிற்கும் வித்தியாசம் காண்பது கஷ்டம். எவ்வளவு தான் களை எடுத்தாலும் சில களைகள் தவறி விடும். சமையல் வேலை இல்லாத போது, விசாலாட்சி ஆறுமுகத்தாரிடம் கேட்டு அறிந்து, தங்கள் காணியில் தப்பி நிற்கும் களைகளைப் பிடுங்குவாள். கணபதியும் தாயாருடன் சேர்ந்து பிடுங்குவான்.

விசாலாட்சி எல்லா வகையிலும் ஆறுமுகத்தாருக்கு துணையாக இருப்பதை  அவதானிக்கும் மற்றவர்கள், தை மாதம் அரிவு வெட்டு, சூடு அடித்தலின் போது தமது மனைவிகளை அழைத்து வருவது என தீர்மானித்துக் கொண்டனர்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

இதையும் படிங்க

ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு? | நிலாந்தன்

வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...

விடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்

……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.

முதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்

சொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில்...

கிழக்கிலங்கை சூறாவளி காலத்தில் துளிர்த்த மனிதநேயம்!

ஆசிரியபீடத்தின் பிராணவாயுவும் கரியமில வாயுவும்! முருகபூபதி. வீரகேசரியின் நீர்கொழும்பு...

தமிழர்களும் யூதர்களும் | ஜூட் பிரகாஷ்

நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்

இலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...

தொடர்புச் செய்திகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்

இலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்

மாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 18 | பத்மநாபன் மகாலிங்கம்

இறைவன் மனிதனை அனைத்தும் உண்ணியாக படைத்தான். அதனால் தாவர உணவுகளுடன் விலங்கு உணவுகளையும் உண்டான். விவசாயத்துடன், மீன்பிடி, மந்தை வளர்ப்பு, வேட்டை என்பவற்றை தொழிலாக கொண்டிருந்தான். ஆதியில் மனிதர்கள் கூட்டமாக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பொங்கல் | கவிதை

கட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..

தாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன?

பச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்

மாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

இஸ்ரேலின் பல பகுதிகளில் மோதல்கள் வெடித்தன

இஸ்ரேல் முழுவதும் பாடசாலைகள் மற்றும் மத செமினரிகளை திறப்பதன் மூலம் கொரோனா வைரஸ் முடக்கல் விதிகளை மீறிய தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதர்களுடன் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இன்டியானா துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்டியானா மாநிலத்தின்...

திருநங்கைகள் மீதான ட்ரம்பின் தடையை மாற்றியமைக்கும் ஜோ பைடன்

இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான பென்டகனின் தடையை நீக்கும் வகையில் ஜனாதிபதி ஜோ பைடன் திங்களன்று ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி...

அரசியல் அறத்தினை மீறாதீர்கள் | விக்கிக்கு அனந்தி கடிதம்!

அந்தக் கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தரப்பின் சார்பில் அனுப்பி வைத்துள்ள பொது ஆவணத்தில் தான் உள்ளிட்ட தமிழ் அரசியல்...

ஐ.நா மகஜருக்கு எதிராக யாழில் போராட்டம்? யாருடைய ஏற்பாட்டில் நடந்தது?

தமிழ் தேசிய கட்சிகள் இலங்கை அரசு மீது மட்டும் போர்க்குற்றச்சாட்டை முன்வைத்து ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் விசாரணைக்கு வலியுறுத்தும் நிலைப்பாட்டுக்கு எதிராக யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று...

126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்தின்...

துயர் பகிர்வு