மீண்டும் பேச்சுவார்த்தை : தென்னாபிரிக்க அரசு விருப்பம் மீண்டும் பேச்சுவார்த்தை : தென்னாபிரிக்க அரசு விருப்பம்

ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும்  பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காண தென்னாபிரிக்க அரசு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் இதனைத் தெரிவித்தார்.

தென்னாபிரிக்க குழுவின் இம் முயற்ச்சிக்கு தமது முழு ஆதரவு தருவதாக கூட்டமைப்பு நேற்று தெரிவித்தபோதிலும் அரச தரப்பிலிருந்து என்ன பதில் கிடைக்கப்பெற்றுள்ளது என்பது தெரியாதுள்ளது.

ஆசிரியர்