September 21, 2023 1:05 pm

வாழ்வியல் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 10வாழ்வியல் |சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 10

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மெசொப்பொத்தேமியாவில் திராட்சைக் கொடிகளும் பயிரிடப்பட்டன. திராட்சையிலிருந்து வைனும்  பழரசமும் பார்லியிலிருந்து பியர் போன்ற திரவமும் தயாரிக்கப் பட்டதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் ஆண் பெண் இருபாலாரும் மது அருந்தியதாகவும் பின்னர் அச்சமுதாயத்தில் நிகழ்ந்த சீர்கேடுகளால் கற்றவர் கூடி சில கட்டுப்பாடுகளை வகுத்ததாகவும் கூறப்படுகிறது. பெண்களே கள்ளை விற்றார்கள். வீடுகளில் சிறு தொழிலாக பார்லியிலிருந்து கள் வடிப்பது நடைபெற்றிருக்கிறது.

அப்போதே சுமேரியர் நாற்காலிகளைச் செய்திருந்தனர். விருந்துகளும் நடைபெற்றிருக்கின்றன. மேலே தந்திருக்கும் படத்தில் கதிரைகளில் இருந்து மது அருந்தும் படத்தைக் காணலாம். அது ஒரு ராணியின் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட சட்டம். அப்படியான பல சட்டங்கள் கல்லறைகள் பலவற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவை சுமேரியரின் வாழ்வியலை அழகாகக் கூறுகின்றன. சுமேரியக் கல்லறைகளின் அமைப்பே  பொம்பரிப்பு வரை காணப்படுகின்றன.

A2

நான் போட்டிருக்கும் மாட்டின் படம் சுமேரியருடயதே அங்கே அதிக அளவில் பெருங் கற்கள் இருக்காவிட்டாலும் வெள்ளை கறுப்புக் கற்கள் இருந்திருக்கின்றன. அவர்கள் பல சிலைகளையும் செய்திருக்கின்றனர். Brithsh Musiam    பல சுமேரியச் சிலைகளையும் உருவங்களையும் கறுப்பு நிறத்தில் வைத்திருக்கிறது. சுமேரியர் மாடுகளை உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தியது தொடங்கி மாட்டின் விதவிதமான சிலைகள் என்பன அவர்கள் மாடுகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டி நிற்கின்றன. ஆனபடியால் மெசொப்போத்தேமியாவில் இருந்துதான் நந்தி வடிவம் இந்தியாவரை வந்துள்ளது எனலாம்.

A3

இங்கு உள்ள படத்தில் ஆண்கள் இடுப்புக்குக் கீழே வேட்டி போன்ற ஆடையும் பெண்கள் சேலை போன்று ஒன்றும் அணிந்திருப்பதைக் காணலாம். இதன் தொடர்ச்சிதான் வேட்டியும் சேலையுமாக ஏன் இருக்க முடியாது?? ஆண்கள் பெண்கள் இருபாலாருமே காதணியும் அணிந்துள்ளனர். கொண்டை போன்ற அமைப்பிலும் தம் முடியை அலங்கரித்திருக்கின்றனர். விவசாயத்துடனும் கண்டுபிடிப்புக்களுடன் மட்டும் சுமேரியர் நின்றுவிடவில்லை. சங்கம் அமைத்து சமூகத்துக்குத் தேவையான தொழில் நுட்ப  அறிவையும் கணித அறிவையும் பெருக்கினர்.

A4

 

 

 

 

இனத்தின் பண்புகளை மேம்படுத்தவும் கட்டுப்பாடுகள் கொண்ட ஒழுங்கான ஒரு சமுதாயத்தை உருவாக்கவும் சங்கம் அமைத்ததனாலேயே உருவாக்க முடிந்திருக்குமே அன்றி சாதாரணமாக தனிப்பட்டவர்களால் சாதித்திருக்க முடியாது.  கொஞ்சம் கொஞ்சமாக கூனிபோர்ம் வடிவம் எழுத்துவடிவம் பெற்ற பின்னரே அடுத்த சங்கம் அமைத்து மொழியை வளர்க்க முடிந்திருக்கும்.

A5

மொழியின் வளர்ச்சி கூட நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் பின்னரே இலக்கண வடிவம் பெற்றிருக்கும் என்றால் மிகையாகாது.  நூற்றைம்பது கால அகழ்வாய்வில் நூற்றுக்கும் அதிகமான சுமேரிய இலக்கியங்கள் வாசிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது அந்த மொழி மட்டும் அழிந்து விட்டதென மேற்குலகினர் கூறுவது நகைப்புக்கிடமானது.

A6

யாழ் என்னும் இசைக்கருவி தமிழர் வாழ்வோடு ஒன்றியது என்பது நீங்கள் அறிந்ததே.

A7

மாமன்னன் இராவணன் யாழ் மீட்டுவதில் வல்லவன் என்றும் யாழை மீட்டியே இறைவனை வசப்படுத்தியதாகவும் வரலாறு உண்டு. யாழ் பாடி யாழ் வாசித்தே யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற கதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

எல்லாவற்றிற்கும் முன்பாக சுமேரியரே கிறித்துவுக்கு முன் 3500 ஆண்டளவில் யாழைக்கூடக் கண்டுபிடித்தனர். சுமேரியரால் கோயில்களில் யாழ் போன்ற இசைக் கருவியை வாசிக்கப்பட்டிருக்கிறது. அதுக்கும் பெண்களே அதிகம் வாசித்துள்ளனர். 1927 இல் பலவகையான சுமேரிய இசைக்கருவிகள் இராக்கில் கண்டுபிடிக்கப்பட்டன.

 

 

தொடரும் …

 

 

Nivetha   நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து

 

 

இத்தொடரின் முன்னைய பகுதிகள்

 

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-4/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-5/

http://www.vanakkamlondon.com/sumerian-history6/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-7/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-8/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-9/

 

 

(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்யார் இந்த சுமேரியர்இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானதுஇவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்னஅப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்