பிரான்சில் தொடங்கப்பட்ட போராட்டம் எரிபொருளுக்கான வரி உயர்வை கண்டித்து அந்நாட்டு அதிபருக்கு எதிராக திரும்பி மிகத் தீவிரமடைந்து வருகிறது.
வார இறுதியில் சனி, ஞாயிறுகிழமைகளில் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. பெரும் கலவரம் ஏற்பட்டு, சாலையில் நின்ற வாகனங்கள் கொளுத்தப்பட்டு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிபர் இம்மானுவேல் மெக்ரான் வரி உயர்வை திரும்பப் பெறுவதாக அறிவித்தும் போராட்டத்தை கைவிட போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர்.
