செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ராஜஸ்தானில் பந்தல் சரிந்து வீழ்ந்து 14 பேர் பலி!

ராஜஸ்தானில் பந்தல் சரிந்து வீழ்ந்து 14 பேர் பலி!

0 minutes read

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் ராமாயண கதாகாலட்சேபம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவர்கள் அமர்வதற்காக இரும்புக் கம்பிகளைக் கொண்டு மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்ததன.

இந்நிலையில், நேற்று மாலை(ஞாயிற்றுக்கிழமை) ஐந்து மணியளவில் பந்தலின் ஒருபகுதி திடீரென்று சரிந்து வீழ்ந்தது.

இதில் 14 பேர் உயிரிழந்ததோடு, 20இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில், அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை, குறித்த விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நன்றி-Litharsan

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.