செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நல்லூர் விடுதியில் வாள்வெட்டு! – ஒருவர் படுகாயம்

நல்லூர் விடுதியில் வாள்வெட்டு! – ஒருவர் படுகாயம்

0 minutes read

யாழ்ப்பாணம் – நல்லூர் கோயில் வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் மர்மக் கும்பல் நுழைந்து நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு 7.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத மர்மக் கும்பல் விடுதியில் நின்றவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தின் போது படுகாயமடைந்தவர் 21 வயதான பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

வாள்வெட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.