செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் பரிதாப மரணம்!

கிளிநொச்சியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் பரிதாப மரணம்!

0 minutes read

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.

24 வயதுடைய விவேகாந்தன் வேணிலவன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் கிணற்றில் விழுந்தது. குறித்த நாயை மீட்பதற்காக இளைஞர் பாதுகாப்பற்ற கிணற்றில் தும்புக் கயிறைப் பயன்படுத்தி இறங்கினார்.

அதன்போது கயிறு அறுந்ததால் அவர் கிணற்றுக்குள் விழுந்தார்.

அவர் சேற்றில் மாட்டிக்கொண்டமையால் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

அயலவர்களின் உதவியுடன் கிணற்று நீர் இறைக்கப்பட்டு இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.