March 31, 2023 6:51 am

13 ஐ அமுலாக்காதீர்! – எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முற்பட்டால் அதற்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும்.”

– இவ்வாறு எல்லே குணவங்ச தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், அவர் தலைமையிலான அரசையும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்காகவே 69 இலட்சம் பேர் வாக்களித்தனர் என்பதை மொட்டுக் கட்சியினர் மறந்துவிடக்கூடாது.

எனவே,13 ஐ அமுல்படுத்த முற்பட்டால் அதற்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்