September 22, 2023 6:06 am

கோர விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் பலி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வாகன விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் சாவடைந்துள்ளனர்.

வேகமாக வந்த கார் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அநுராதபுரம், இராஜாங்கனையில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 67 வயதான வயோதிபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற ஐந்து வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, காரின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற – விபத்தில் சாவடைந்த ஐந்து வயது சிறுமியின் தந்தை (வயது 35), தாய் (வயது 32) ஆகியோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹயஸ் வாகனத்தின் சாரதியான 28 வயது இளைஞரும் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்