December 2, 2023 11:31 am

யாழ். பல்கலையில் புருசோத்தமனின் நினைவேந்தல்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மாணவர்கள் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008.11.01 ஆம் திகதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்