செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு மற்றும் குரல்பதிவுப் பெட்டிகள் ஆராய்வு!

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு மற்றும் குரல்பதிவுப் பெட்டிகள் ஆராய்வு!

1 minutes read

இந்தியா – அகமதாபாத் நகரில் கடந்த 12ஆம் திகதி விபத்துக்குள்ளான Air India விமானத்தின் கருப்புப் பெட்டி கடந்த 14ஆம் திகதி மீட்கப்பட்டது.

தற்போது விமானத்தின் குரல்பதிவுப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது.

அவ்விரண்டு பெட்டிகளின் தகவல்களை ஆராய சுமார் 5 நாட்கள் வரை எடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவை விமானம் விபத்துக்குள்ளான காரணம் உள்ளிட்ட விரைவான விசாரணைகளுக்குப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி : குஜராத்தின் முன்னாள் முதல்வரும் விமான விபத்தில் பலி!

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மேற்படி Air India விமானம் சில நொடிகளில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். மேலும், மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் தங்கியிருந்த கட்டடத்தில் விமானம் மோதியதமையால், அங்குதங்கிருந்த 38 பேர் உயிரிழந்தனர்.

Boeing 787 Dreamliner ரக விமானம் விபத்துக்குள்ளாகியமை இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவின் விமான விபத்து விசாரணைப் பிரிவு விபத்து குறித்து விசாரணை மேற்கொள்கிறது. அத்துடன், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அதிகாரிகளும் விசாரணைக்குக் கைகொடுத்துள்ளனர். மேலும், போயிங் நிறுவனமும் விசாரணையில் உதவிவருகின்றது.

இலண்டனை நோக்கிப் பயணித்த நிலையில் விபத்துக்குள்ளான AI 171 என்ற இந்த விமானத்தில் 53 இங்கிலாந்து பிரஜைகள் பயணித்திருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.