Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பட்டுப் புடவையைத் தரமாகப் பராமரிக்க சில வழிபட்டுப் புடவையைத் தரமாகப் பராமரிக்க சில வழி

பட்டுப் புடவையைத் தரமாகப் பராமரிக்க சில வழிபட்டுப் புடவையைத் தரமாகப் பராமரிக்க சில வழி

3 minutes read

பெண்கள் பட்டுப் புடவை எடுப்பதற்குள் கடை ஒரு வழி ஆகிவிடும் என்று பரவலாக கிண்டலடிப்பது உண்டு. பட்டுப் புடவை விலை அதிகம் கொடுப்பதால், அதை அவ்வளவு சிரத்தையுடம் எடுப்பார்கள். அது மட்டும் அல்ல, அதனை பராமரிப்பதற்கும் நிறைய வேலை இருக்கிறது.

அதாவது,

பீரோவில் திறந்த நிலையில் பட்டுப்புடவைகளை வைக்கக் கூடாது துணிப் பையில் போட்டு அதனை கவரில் வைத்து வைக்கலாம்.

நிறைய ஜரிகை உள்ள பட்டுப் புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும். எனவே, பட்டுப் புடவைகள் மீது வேறு ஏதேனும் துணிப் போட்டு அதன் மீது ஐயர்ன் செய்யலாம்.

அதுபோல பட்டுப் புடவைகளை ஸ்டீல் பீரோவை விட மர பீரோவில் வைத்தால் என்றும் புதியதுபோல பல வருடங்கள் இருக்கும்.

விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுப் புடவையைத் தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுப் புடவையைக் களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது. நிழலில் காற்றாட சில மணி நேரங்கள் உலரவிட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

பருத்தித் துணியால் ஆன பைகளில் பட்டுப் புடவைகளைப் போட்டு பராமரித்தால் ஜரிகை கறுக்காமல் இருக்கும்.

எக்காரணம் கொண்டும் பட்டுப் புடவையைச் சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. சோப்போ, சோப் பவுடரோ உபயோகித்துத் துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

பட்டுப் புடவையை மாதத்திற்கு ஒருமுறை, மடித்து வைத்ததற்கு எதிர்ப்புறமாக மடித்து வைக்க வேண்டும். இல்லை என்றால், மடித்த இடங்களில் இருக்கும் ஜரிகைகள் அவ்விடத்தில் தளர்ந்து போய்விடும்.

பட்டுப் புடவையில் ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய்க் கறை இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர்விட்டு அலச வேண்டும். சாதாரண கறைகள் ஏதேனும் இருப்பின் அந்த இடத்தில் மட்டும் சிறிது எலுமிச்சைச் சாறுவிட்டு கறையை நீக்கிவிட்டு உலர்த்தவும்.

பட்டுப் புடவைகளை அடித்து பிரஸ் போட்டு துவைக்கக்கூடாது. முதலில் அலசும்போது உப்பு போட்ட குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் சாயம் கெட்டிப்பட்டு பட்டுப்புடவை நீண்டநாள் உழைக்கும்.

பட்டுப் புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக் கூடாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.

பட்டுப் புடவைகளைத் துவைக்கும்போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். காரமான சோப் கூடவே கூடாது.

பட்டுப் புடவைகளை அயர்ன் செய்யும்போது ஜரிகையைத் திருப்பி அதன்மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன்  செய்யக்கூடாது.

பட்டுப் புடவைகளை தண்ணீரில் நனைப்பதைவிட ட்ரைவாஷ் செய்வதே நல்லது.

பட்டுப் புடவையைக் கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப்பையில் வைக்க வேண்டும்.

பாசிப் பருப்பை ஊறவைத்து நீர் விட்டு அரைத்து பட்டுப்புடவையின் கறை உள்ள இடத்தில் தேய்த்து அலசினால் கறை நீங்கி விடும்.

பட்டுப் புடவையில் துருக்கறைபட்டால் ஆக்சாலிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் வாங்கி துருபிடித்த இடத்தில் தேய்த்து வெயிலில் வைத்தால் துருக்கறை மாயமாய் மறைந்துவிடும்.

பட்டுப் புடவைகளுக்கு இரசக் கற்பூர உருண்டைகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான ஷாம்பு போட்டு, கைகளால் துவைத்து சிறிது கஞ்சி போட்டு நிழலில் காய வைத்துப்பின் இஸ்திரி செய்தால் புதியதுபோல் பளபளக்கும்.

ஆறு கிராம்புகளை பழைய துணியில் சிறு மூட்டைபோல் கட்டி, ஜரிகை உள்புறமாக இருக்குமாறு மடித்து வைக்கப்பட்ட பட்டுப் புடவைகளுக்கு இடையில் வைத்தால் பட்டு பழுதடையாமல், பூச்சி அரிப்பு ஏற்படாமல் புடவையைப் பாதுகாக்கலாம்.

முதல் தரம் பட்டுப் புடவையை அலசும்போது பக்கெட் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு அதில் ஒரு ஐந்து நிமிஷம் பட்டுப் புடவையை முக்கி வைத்து அலசுங்கள். பட்டுப்புடவையின் எக்ஸ்ட்ரா சாயம் எல்லாம் நீங்கிவிடும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More