Monday, September 20, 2021

இதையும் படிங்க

ஈழத்தின் இலக்கிய ஆளுமை நந்தினி சேவியர் காலமானார்!

ஈழத்தின் இலக்கிய ஆளுமை நந்தினி சேவியர் காலமாகியுள்ளார். தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் (பி. மே 25, 1949)...

இறைவன் படைப்பில் | மதிவதனி குருச்சந்திரநாதன்

மனிதன்அவன் மட்டும்இறைவன் படைப்பில்இல்லாத ஓர் கணக்கெனில்இந்த பூமி வாழ்ந்திருக்கும் இழவு வீடு தன் வீட்டில் நடக்கமாற்றான் தாயின் மகப்பேறிற்குநலன்...

ஞானம் இதழ் பற்றிய கலந்துரையாடலுக்கு அழைப்பு!

ஞானம் கலந்துரையாடல் - 256 அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரம், மாலை 16:45...

‘சி.வி : மலையகத்தின் ஒளிரும் மூர்த்திகரம்’ | 107 ஆவது பிறந்த தின நினைவேந்தலும் நினைவுப்பேருரையும்

மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் 107  ஆவது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் செப்டெம்பர் 14  ஆம் திகதி 'நினைவுப் பேருரை'...

அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020இல் விருது பெறும் ஈழ எழுத்தாளர்கள்!

அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020 இல் நாவல் இலக்கிய பிரிவில் விருது 'உயிர்வாசம்', நாவலாசிரியர் தாமரைச்செல்வி அவர்களுக்குவழங்கப்படவுள்ளது. அதே பிரிவில்  'வலசைப் பறவைகள்', நாவலாசிரியர் சிவ ஆரூரன் அவர்கள் சான்றிதழ்...

படகு மனிதர்களின் ஆத்மாவை புதிய நாவலில் சித்திரித்த படைப்பாளி தாமரைச்செல்விக்கு சாகித்திய விருது! | முருகபூபதி

தாமரைச்செல்வியின்  “ உயிர்வாசம்  “ நாவலுக்கு  இலங்கையில் தேசிய சாகித்திய விருது !  கடந்த அரை நூற்றாண்டு...

ஆசிரியர்

மனக்குமுறல் | சிறுகதை | முல்லை அமுதன்

சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள்.

வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள்.

‘எவ்வளவு?’ ஆங்கிலத்திலேயே கேட்டாள்.

வித்தியாவும் சொன்னாள்.’120 பவுண்ட்’

விலை அதிகம் என்றாள்.

‘இல்லை.. நீங்கள் 200க்குள்ள வேணும் எண்டனீங்கள். அதுதான்…’

வித்தியாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னாள்.

‘இது 10 ரூபாயும் பெறாது’

வித்தியாவிற்கு கொஞ்சமாக ஏறியது. காட்டிக்கொள்ளாமல் செய் கூலி இல்லாமல், பொருளுக்கு மட்டுமே சொன்னனான்’.

‘பகிடி விடாதையும்… யாவாரிகள் உப்பிடித்தான் கதைப்பினம்.. கொள்ளை லாபம் வைக்காமல் இருக்கமாட்டினம்’

கோபத்தை அடக்கிக்கொண்டு ‘என்ன சொல்ல வாறியள்?’ கேட்டாள் வித்தியா.

‘எப்படியோ வாங்கின சாமான்கள் முழுக்க பாவிச்சிருக்கமாட்டியள். மிச்சத்தை இன்னொன்று செய்தும் வித்துப்போடுவியள்.. பிறகேன் அறா விலை சொல்லுறியள்’ வந்தவள்தான் கேட்டாள்.

அவளின் காரை பார்த்தாள். விலையுயர்ந்த கார். அங்கும் பேரம் பேசியிருப்பாளோ..

வித்தியா பல்கலைக் கழகக் கல்வியை முடித்தபின்பு ஓய்வான பொழுதில் கேக் செய்து விற்றுவந்தாள். அதில் லாபமும் வந்தது. ஆனாலும் லாபம் கருதிச் செய்யக்கூடாது என்பதில் முடிவாய் இருந்தாள். அதனால் சில சமயங்கள் இலவசமாகவும் கொடுத்து வந்தாள். இப்போது பணக்காரரின் ஓடர் கிடைத்திருக்கிறது. லாபம் இன்றிச் செய்து கொடுத்தால் நிறைய ஓடர் கிடைக்கும் என்றும் கணக்குப் போட்டாள். அது தப்பாய்ப் போயிற்றே என்றும் வருந்தினாள்.

சிலர் இப்படி பேரம் பேசுவார்கள் தான். இப்படி படாடோபமாய் வந்து பந்தா காட்டமாட்டார்கள். ஓடர் செய்வதற்கு முன்பே எவ்வளவு ஆகும் என்பாள். முடிந்த பிறகும் வட்ஸப்பின் ஊடாகவும் படத்தை எடுத்தும் அனுப்புவாள். பேரம் பேசுவார்கள். அல்லது ஓடர் வேண்டாம் என்பார்கள். ஏமாற்றமாய் இருக்கும்.. கடைகளில் என்றால் விலை நிர்ணயம் செய்திருப்பதால் பேரம் பேசுவது கௌரவப்பிரச்சினை என்று விருப்பமில்லை என மற்றக்கடை நோக்கி நகர்ந்துவிடுவார்கள். ஆனால் வித்தியா..?

தனித்தே சமாளிக்க வேண்டும்.

கேட்டாள்.

‘கடைசியாய் என்ன விலை சொல்லுறியள்?

’40 தரலாம்.. கொஞ்சம் டிசைனையும்  மாத்தவேண்டும்… இரண்டு முந்திரி போட்டிருக்கிறியள். ஒற்றைச் சிப்பியும் மேல வச்சிருக்கிறியள். அதுக்கும் காசு போட்டனீங்களே’

வித்தியாவின் கோபம் அதிகரித்தது..

‘கடையில என்டா உப்பிடிக்கேப்பியளே.. நான் உங்கட மகளின்ர வயசும் இருப்பனோ தெரியாது… படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கும் மட்டும் இதை செய்யுறன்.. வாற போற எல்லாரும் இரக்கமேயில்லாம பேரம் பேசினா நாங்கள் வாழ என்ன செய்யுறது? நீங்க என்ன விட அதிகம் படிச்சிருக்கலாம்.. பணக்காரராயும் இருந்துட்டுப் போங்கோ.. கவலையில்லை.. மற்றவேன்ர உழைப்புக்கு மரியாதை தாங்கோ….’

‘இதை யாரும் வாங்காட்டி குப்பையிலதானே போடப்போறியள்.. அதை நான் கேட்ட விலைக்கே தரலாம் தானே’

கோபத்தில் கொதித்தாள் வித்தியா..

‘போடிப்..’ கேக்கைத் தட்டி விட்டாள். கேக் சிதறி நிலத்தில் விழுந்தது. ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. வந்தவள் வெளியேபோய் காரை இயக்கினாள்.

வித்தியா நிலத்திலேயே தொப்பென்று குந்தினாள்.

‘மனிதர்கள் வாழ விடமாட்டார்கள்.’

கண்ணீரில் கரைந்தாள் வித்தியா.

.

நிறைவு..

– முல்லைஅமுதன்

இதையும் படிங்க

அண்ணாவை நினைக்கின்றோம் | கவிக்கிறுக்கன் முத்துமணி

மண்ணாய் கிடந்த மறத்தமிழர் உதிரம்அண்ணா என்ற அடலேறு வந்தபின்னால்பொன்னாய் மின்னியது புனலாய் பொங்கியதுசின்னானும் சேவகனும் சீமைத்துரை...

பிரான்சிஸ் கிருபா | கவித்துவத்தின் தேவதை

மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் ஒரு மேன்ஷனில் அஜயன்பாலா தங்கியிருந்தார். அப்போது எனக்கு வசிப்பிடம் பழவந்தாங்கல். நகரத்துக்குப் போகும்போதும் வரும்போதும் பல...

அறிவு கெட்ட காட்சி: நகுலேசன்

பெருங்குடி மக்கள்தெருவில் கூடி கொரோனா வாங்கும்அறிவு கெட்ட காட்சி முடக்கம்,சமூக இடைவெளிமுனைப்பான பரிசோதனைகள்அனைத்துமே...

எழுத்தாளர் ஃப்ரான்சிஸ் கிருபா மறைந்தார்! படைப்பாளிகள் இரங்கல்!!

கவிஞரும், எழுத்தாளரும், திரைப்பட பாடலாசிரியருமான ஃபிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தருணங்கள் | சிறுகதை | இந்திரா பாலசுப்ரமணியன்

விழுந்தடித்துக்கொண்டு பார்த்தியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போனபோது, ஆளைவிடு என்கிற மாதிரி பக்கத்து வீட்டுக்காரர் கழண்டு கொண்டார். ஆறுமாதத்தில் ஒரு உயிர் நண்பனை இப்படி...

நந்தினி சேவியர் படைப்புகள் | சு. குணேஸ்வரன்

விடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள்,...

தொடர்புச் செய்திகள்

ஒரு கிராமம் ஒரு தெய்வம் | சிறுகதை | அருணை ஜெயசீலி

என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக...

தப்பிப் பிழைத்தல் | சிறுகதை | அலைமகன்

செந்தூரனுக்கும் எனக்கும் எப்போது பழக்கம் ஏற்பட்டது என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் எனக்கு மிக உறுதியாக தெரியும்....

என் அம்மா | சிறுகதை | பொன் குலேந்திரன்

என் குடும்பத்தில் அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, மாமா, அம்மம்மா. முத்து ஆகிய நான் குடும்பத்தில் சிறியவன். கடைக்குட்டி பயல் ஒன்பதாம் வகுப்பில் படித்த காலம் அது. ஐம்பதில் சிவாஜி...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பெண்களை அழகு தேவதைகளாக மாற்றும் சமையலறை பொருள்!

பெண்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்துவார்கள். அதேபோல் முகத்தின் அழகை கூட்டுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதன் காரணமாகவே...

ஒரு கிராமம் ஒரு தெய்வம் | சிறுகதை | அருணை ஜெயசீலி

என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

ஜெனிவாவின் முயற்சிகளுக்கு ஒரு போதும் இடமளியோம்!

நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது...

நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு!

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு ‘பேய காணோம்’ என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர்...

இந்தியாவில் குறைந்த செலவில் நிறைந்த பலன் செயற்கைக்கோள்களை ஏவ சிறு ராக்கெட்கள் தயாரிப்பு!

பெங்களூரு: ‘செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் சிறிய வகை ராக்கெட்டுகளை உள்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும்,’ என்று என்எஸ்ஐஎல் தலைவர் தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் இஸ்ரோ சாதனை படைத்து வருகிறது. விண்வெளி...

இலங்கையில் பரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமுமில்லை!

கல்விப் பொதுத் தராதரபத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினங்களில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. இது...

புரட்டாசி மாதம் முழுவதுமே விரத நாட்களே..!

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டும்தான் உகந்தநாள் என்று இல்லை. புரட்டாசி மாதம் முழுவதுமே விரத நாட்கள் தான். புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் சித்தி விநாயகர்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 20.09.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள்...

துயர் பகிர்வு