Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

கடவுள் மறைத்து வைத்த உலகம் | துவாரகன்

கொள்ளைக்காரரின் கண்களிலிருந்துகடவுள்அந்த உலகத்தைமறைத்து வைத்திருந்தார். அது குழந்தைகளின் உலகம். அங்கேபறவைகளின் சங்கீதம் இருந்ததுகாற்றுக் கரங்களின்அரவணைப்பு...

இலங்காபுரியின் நீரோ மன்னன் | சி.கிரிஷாந்த்ராஜ்

நீரோ மன்னனின் ஆவிஇலங்காபுரிக்குள் புகுந்தது;தீக்குப் பஞ்சமேற்படஃபிடிலைப் பறித்துஎரித்தனர் குடிகள்! ஃபிடில் விறகான ஆத்திரத்தில்குடிசைகளை எரித்தது ஆவி;கடைசியில் நகரம்வரைபரவிற்று பஞ்சத்தீ!

நிர்வாண மனிதர்கள் | துவாரகன்

வெட்கப்படவேண்டியது நீங்கள்தான்.உங்கள் நிர்வாணம்தான்வீதியெங்கும் மிதக்கிறது. மண்ணைக் கிளறிவெற்றிலைக்காவி தெரியச் சிரிக்கும்உ ழைப்பாளியும்உங்களைப் பற்றித்தான்கேலி பேசுகிறான்.இதைவிடஓட்டைச் சிரட்டைக்குள்சீவனை விட்டிருக்கலாம்என்கிறாள் அம்மா.

ஏழைமகன் வாழ்வினிலும் | சண்முகபாரதி

எங்கிருந்தோ மீட்டுகின்ற வீணை ஒலி –என்இதயம் அளந்த கதை சொல்லிடவா…பொங்கிவரும் என் இதய உணர்வுகளால் –உனைபோற்றி ஒரு காவியம் நான் தரவா

காதோரம் காதல் பேசும் ஓர் நிமிடம் | கேசுதன்

தெவிட்டாத தேடல்களும்தேன் சிந்தும் சிணுங்கல்களும்சிணுங்கலுடன் சேர்ந்த சீண்டல்களும்செல்களினூடே ஊடுருவி சென்றதுநிமிடங்களை தள்ளிச் செல்லும்கடிகார முட்கள் உதடுகளை உரசிச் செல்லும்...

புத்திசாலி | ஒரு பக்க கதை | வளர்கவி

அந்த மளிகைக் கடை, கல்லாவில் உட்கார்ந்திருந்த சந்திரா, தன் கணவன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் பொருட்களை தராசில் எடை போட்டு நிறுத்துக் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆசிரியர்

காதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி

“காவ்யா… உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா… வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்….” காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.
“அம்மா… அவள் பணக்கார வீட்டு பிள்ளை. அதிலும் செல்லமாவே வளர்ந்தவள்… கொஞ்சநேரம் நித்திரை கொள்ளட்டும். விடும்மா… நேற்று இரவு தானே வந்தவள். அலுப்பாக இருக்கும்லமா” என்றுவிட்டு அறையினுள் சென்றவள்…
“அனு… அனு…” அவளது நண்பியை தட்டி எழுப்பினாள்
“ம்…. என்ன…” அனுக்ஷா
“எழும்படி தூங்கு மூஞ்சி. வருசபிறப்பும் அதுவும்மா தூங்குறியா… அங்க அம்மா கத்துறாடி. எழும்பி குளி… போ…”
“இன்னும் கொஞ்ச நேரம்டி… ப்ளீஸ்…”
“இன்னும் கொஞ்ச நேரத்தில எங்க அம்மாவே வந்திடுவாங்க… அவங்ககிட்ட சொல்லிக்க…”
“ஐயோ வேண்டாம்.” எழுந்து குளிக்க சென்றாள்.
கிணற்றடிக்கு சென்றவள் “காவ்யா…” என்றவாறு ஓடி வந்தாள்.
“என்னடி… குளிக்கலையா…?”
“காவ்யா… கிணற்றில அள்ளியெல்லாம் பழக்கம் இல்லடி… நீ வா. அள்ளித்தா… செல்லம்ல… ப்ளீஸ் டா” அனு கெஞ்சினாள்
“சரி.. சரி… வா…” என சிரித்தவாறே அழைத்துச் சென்றாள்.
“உனக்கு அப்பவே சொன்னான். இங்க உனக்கு கஷ்டம் என்று. கேட்டாத்தானே… முதல் நாளே இப்பிடி என்றால் இன்னும் நான்கு நாட்கள் எப்பிடி சமாளிப்பாய். பேசாம நாளைக்கே உங்க வீட்டுக்கு கிளம்புடி. கஷ்டப்படாத. உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை உண்டு இல்லை பண்ணிடுவாங்க….” – காவ்யா
“அதெல்லாம் ஒன்றுமில்லை. நானும் பழகத்தானே வேணும்… வாழப்போற வீட்டில எல்லாவற்றையும் எதிர்பார்க்க முடியாதுல… ரெண்டு நாள்ல எல்லாம் சரியாகிடும்…” அனு கூறினாள்.
“புடிக்கிற கொப்ப புளியங் கொப்பா பார்த்து புடிச்சுக்க…. ” காவ்யா சொல்லவும் அனு மனசுக்குள் சிரிச்சுக் கொண்டாள்.

காவ்யா தண்ணி இறைச்சுக் கொடுக்க அனு குளித்தாள். இடையில் ஓரிரு தடவைகள் அனுவும் தண்ணி இறைச்சு பழகினாள். ஆனாலும் கையில் கயிறு வெட்டிவிட பல்லைக் கடிச்சுக் கொண்டு சமாளிச்சுக் கொண்டாள்.

கோவிலுக்கு போவதற்காக டெனிம் ஜீன்சும் டீ ஷர்ட் உம் அணிந்து கொண்டு வெளியே வந்தாள் அனு.
“என்னமா… ஷாப்பிங் போறிங்கலாமா…” காவ்யாவின் தாய் கேட்க
“இல்லை ஆன்டி. கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு…” என இழுக்க
“இப்பிடியேவா… ரோட்டில நிற்கிற நாயெல்லாம் துரத்தும்.பரவலையா…”
“அங்க நாங்க இப்பிடித்தான் ஆன்டி…” முடிக்க முன்னர்
“கொழும்பில இது ஓகே பிள்ளை. இங்க சரிவராதுமா… எங்களுக்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்குல. போயி பஞ்சாபி சரி பாவாடை சட்டை சரி போட்டுடு வாம்மா…”
“சரி ஆன்டி.” என்றுவிட்டு உள்ளே சென்றவள் சேலையில் வந்தாள்.
“அம்மாடியோவ்… அந்த மஹாலக்ஷ்மியே நேரில வந்த மாதிரி இருக்கு… என்ர கண்ணே பட்டிடும் போல இருக்கு…” என்றவாறு அவளுக்கு திருஷ்டி சுற்றினார்.
அனு வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டு நின்றாள்.
“சேலை அணிந்ததுமே வெட்கம் எல்லாம் வந்திடுசுல…” என காவ்யா கிண்டல் பண்ண.
“பாருமா… எவ்வளவு அழகா இருகிறாய் என்று. இதைவிட்டுடு அந்த கண்றாவியெல்லாம் எதுக்குமா போடுறாய்…” காவியாவின் தாய் கூற
“மன்னிச்சுடுங்க ஆன்டி. இனிமேல் நா போட மாட்டன்.”
“இல்லைமா. கொழும்பில போட்டுக்க. அங்கத்தைய வாழ்க்கை முறைக்கு அதுதான் வசதியா இருக்கும். இங்க வரும் பொழுது தவிர்த்துக்கோ.”
“சரி ஆன்டி”
“காவ்யா… பார்த்து கூட்டிடு போயிட்டு வா. சீக்கிரம் வந்திடனும். இங்க பொங்கல் வேலை நிறைய இருக்கு.”
“சரிம்மா…”
இருவரும் கோவிலுக்கு சென்றனர்.

முற்றத்தில் பொங்குவதற்காக அனைத்தையும் தயார் செய்துகொண்டிருந்தார் ரஞ்சனி. காவ்யாவும் அனுவும் கோவிலால் வந்ததும் பொங்கல் வேலைகளில் இணைந்து கொண்டனர்.

முற்றத்தில் மாட்டு சாணகத்தினால் மெழுகி கோலமிட்டாள் காவ்யா. புதினமாக பார்த்துக்கொண்டிருந்தாள் அனு.
“சாணகத்தின் வாசம் எப்பிடிடி?” காவ்யா கேட்டாள்
“பழகிக்க வேண்டியது தான்…”
“அப்பிடியா… அப்போ சாணகத்தில ஒரு பிள்ளையார் பிடிச்சு இந்த கோலத்துக்கு மேல வைச்சு பூவும் அருகம்புல்லும் வைச்சுவிடு”
அருவருப்பாக இருந்தாலும் சொன்னதை செய்தாள்.
“ஏன்மா அனு… உனக்கு எதுக்கு இந்த ஆசையெல்லாம். ராணி மாதிரி இருக்க வேண்டியவள் இதையெல்லாம் செய்யணுமா…?” அம்மா கேட்டார்.
வெறும் புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு சென்றாள்.

காவ்யாவும் அனுவும் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்தனர்.
ஒன்றாக அமர்ந்திருந்து அனைவரும் பகிர்ந்து உண்டனர்.

“ஆன்டி… பொங்கல் எப்பிடி இருக்கு…?” – அனு
“நல்லா இருக்குமா. ஆனா… நீ தான் கஷ்டப்பட்டுடல…?”
“இல்லை ஆன்டி. எனக்கு பிடிச்சுத்தான் செய்தேன். இந்த வாழ்க்கை முறை வித்தியாசமாக இருந்தாலும் மனசுக்கு சந்தோசமாக இருக்கு…”
“உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா எங்க கதை முடிஞ்சிடும்”
“உண்மைய சொன்னா எனக்கு அந்த பகட்டு வாழ்கையில கொஞ்சமும் ஆசையில்லை ஆன்டி. எங்க கலாச்சார வாழ்க்கை வாழத்தான் ஆசை. அதுக்கு தான் இங்க வந்தேன். இப்பிடியெல்லாம் முற்றத்தில பொங்கி படைச்சு சாப்பிட்டு பழக்கம் இல்லை ஆன்டி. உண்மையிலயே மனசு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா.”
தொடர்ந்தாள்,
“அங்க என்றால் வீட்டுக்குள்ள சம்பிரதாயத்துக்காக கொஞ்சமாக பொங்குவோம். பலகாரங்களை கடையில வாங்குவோம். சரி. அங்கயும் கோவில் இருக்கு. போவோம் தான். ஆனாலும் இங்க போகும் பொழுது வருகிற மன அமைதி அங்க இல்லை ஆன்டி. இண்டைக்கு போன பொழுது அப்பிடியே இன்னும் கொஞ்ச நேரம் நின்றிடலாம் போல இருந்திச்சு. இங்க இருக்கிற அமைதியான சந்தோசமான வாழ்க்கை அங்க இல்லை ஆன்டி. இங்க இருக்கிறவங்களுக்கு அது பெரிதாக இருக்கலாம். எனக்கு அப்பிடி இல்லை.”

“ஆன்டி… எனக்கு இந்த ஊரை சுற்றி பார்க்கணும்னு ஆசையா இருக்கு…”
“அதுக்கென்ன… காவ்யாவோட போயிட்டு வா. பார்த்து நடந்துக்கணும். உன்னை மாதிரி அழகான பொண்ணை பார்த்தா நாக்கை தொங்க போட்டுடு பின்னாலேயே வருவானுக பொறுக்கி நாய்கள்… கவனமாக போயிட்டு வாங்க…”

இருவருமாக ஊரை சுற்றி பார்க்க புறப்பட்டனர்.

விடுமுறை முடிந்ததும் அனு கொழும்பு சென்றாள். காவ்யாவின் வீட்டில் நடந்தவற்றை ஒன்று விடாமல் தன தாய் தந்தையரிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள்.

மாதங்கள் ஓடி வருடங்கள் சில கடந்தது.

“அனு குட்டி… உனக்கு ரெண்டு மூன்று மாப்பிளைட படம் வந்திருக்குமா… பார்த்து பிடிச்சதை சொல்லு. எல்லாமே நல்ல இடம்…” அனுவின் தாய் கூறினார்.
“இப்ப என்ன அவசரம்மா கல்யாணத்துக்கு…?”
“அவசரம் ஒன்றும் இல்லை குட்டி. வீடு தேடி வந்த வரனை ஏன் தட்டுவான் என்று பார்க்கிறான்.”
“அதுக்கில்லை….” என இழுக்கவும்,
“நீ யாரையாவது விரும்பிறியா…? அப்பிடி இருந்தா சொல்லு. எங்களுக்கும் ஓகே என்றா அவனையே கட்டி வைச்சுடுறம்…”
“அது… வந்து… என்னோட பிரெண்ட் காவ்யாவோட அண்ணனைத் தான்… “

“என்ன அனு விளையாடுறியா… அவங்க எங்கே. நாம எங்கே. அவங்க கூட எப்பிடி சம்பந்தம் வைச்சுக்க முடியும்… உன்னால அவங்க கூடெல்லாம் வாழமுடியாது கண்ணு… புரிஞ்சுக்கோடா….”
“அம்மா… கவ்யாவோட அண்ணனை காவ்யா மூலம் தெரியும். அப்புறம் பேஸ் புக் ல சட் பண்ணிக்குவோம். போன் ல கதைக்கிறனான். இன்னமும் காவ்யாக்கு கூட தெரியாது. இது ஆரம்பிச்சு நான்கு ஐஞ்சு வருஷம் வரும். ஒருதடவை காவ்யா வீட்டுக்கு போயிட்டு வந்தன் தெரியுமா… அது கூட அவங்களை போய் பார்த்து பழகிக்கணும் என்கிற ஆசையில போனது தான். அவங்க வாழ்கை முறை எப்பிடி என்று காவ்யா சொல்லி இருக்குறாள். ஆனாலும் நானும் பழகிக்கணும் என்று தான் போனேன். என்னால வாழமுடியும் அம்மா. இப்பெல்லாம் அடிக்கடி போய் வாறதால பழகிட்டுது. அவங்களுக்கும் தெரியாது நான் ஏன் வந்து போறேன் என்று… எல்லாமே காரியமாக தான். அவர் இப்ப கட்டார்ல நல்ல வேலையில இருக்குறார். இன்னும் இரண்டு மூன்று வருசத்தில திரும்பி வந்து தனியாக தொழில் ஆரம்பிக்க போகிறார். ப்ளீஸ் மா… முடியாது என்று மட்டும் சொல்லிடாதீங்க…” அனு கெஞ்சி கேட்டாள்.

சற்று நேர யோசனையின் பின்…
“அனு… எனக்கு உன்னோட வாழ்க்கைதான் முக்கியம். நானும் ஏதோ நீ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தான் சொல்றியோ என்று பயந்தேன். ஆனா… தெளிவாக தான் ஒவ்வொரு காயாக நகர்த்தியிருக்கிறாய். சும்மா வாய் பேச்சில என்னால முடியும் என்றுட்டு அங்க போய் கஷ்டப்பட வேண்டி இருக்கும். அவங்க வாழ்கை முறையை வாழ்ந்து பார்த்திட்டாய். உன்னால சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உனக்கு இருக்கு. அந்த நம்பிக்கை உனக்குள்ள இருக்கும் பொழுது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைமா. அவங்க கிட்ட சொல்லு. முறைப்படி வந்து பொண்ணு கேட்க சொல்லி. அடுத்த முகூர்த்ததிலயே கல்யாணத்தை முடிச்சிடலாம். சந்தோசம் தானே.”

தாய் சொல்லி முடிக்கவும் முகப்புத்தகத்தினூடக தகவல் காவ்யாவின் அண்ணனுக்கு பறந்தது.

முற்றும் ….

– கயல்விழி

நன்றி : எழுத்து.காம்

இதையும் படிங்க

பத்துக் கட்டளைகள் | துவாரகன்

உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன். முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.பின்னர்எண்ணெயில்லாமல்பந்தம் பிடிக்கவேண்டும்இன்னமும்அவர்கள் நடக்கும்போதுவால் நிலத்தில் படிந்துஅழுக்காகாமல் பார்த்துக்...

ஈழக் கவிஞர் கண்டாவளைக் கவிராயர் மறைந்தார்!

ஈழத்தின் முதுபெரும் கவிஞர் கண்டாவளைக் கவிராயர் இன்று காலமானார்.கிளிநொச்சி கண்டாவளையை பிறப்பிடமாகவும் முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட கண்டாவளைக் கவிராயரின் இயற் பெயர் குமாரவேலு...

தெருவோர தேநீர் கடை | கேசுதன்

ரணங்களை தங்கிய நெஞ்சமும் மெழுகாய் உருகும் ஓரிடம்பூக்களை மொய்த்திடும் வண்டுகளை போல்அலைச்சலை அழித்து திசை எட்டும் செய்திகளை கூட்டமாய் கொண்டாடிடும் ஓர் அரங்கம்மனங்களை...

கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது!

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’ தமிழ்ப் பேராயம் வழங்கியது அக்டோபர்.22. சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம்...

யார் அவள் | சிறுகதை | கலைச்செல்வம்

சூரியன் உதிக்கும் முன் சேவலாய் கொக்கரித்துத் தன்னை எழுப்பும் கைதொலைபேசிக்கு அன்று ஓய்வு தரப்படத்தை மறந்துத் திடீரெனெ விழித்த எழிலின் கண்களுக்கு, ஜன்னல்கள்...

வார்த்தை | கவிதை | கவிதைக்காரன்

உன் மீதுஎனக்குகாதலெல்லாம் இல்லை..காதல் என்ற வெறும்மூன்றெழுத்தில் எப்படி சொல்வது,உனக்கானஎன் நேசத்தை...? வெறும்காதலையும் தாண்டியஉனக்கான என்பிரபஞ்ச நேசத்தைசொல்லி விட,

தொடர்புச் செய்திகள்

ஊடலும் கூடலும் | கவிதை | கயல்விழி

எத்தனைமணித்தியாலங்கள்காத்திருந்து விட்டேன்ஒவ்வொரு மணிநேரமும்வருடங்கள் தரும்வலியினைதந்துவிட்டனம்ம்நீ கண்டுகொள்ளவேயில்லை. காலை தேநீர்வேளையில்நீ அனுப்பும்இதய சின்னமும்முத்த ஸ்மைலியும்இன்று காணவேயில்லை.

தனிமையின் தவிப்புகள் | கவிதை | கயல்விழி

கருவில் சுமந்தவளே-என் கண்ணீரை பார்அன்னையின் மடியில்ஆசையாய் பிள்ளைகள்உறங்கும் போதுஇதோஇவள் மட்டும்தனிமையில் தாய் மடிதேடியபடி உன் கரங்களில் கொடுக்கும்ஒரு பிடி...

ஊடலும் கூடலும் | கவிதை | கயல்விழி

எத்தனைமணித்தியாலங்கள்காத்திருந்து விட்டேன்ஒவ்வொரு மணிநேரமும்வருடங்கள் தரும்வலியினைதந்துவிட்டனம்ம்நீ கண்டுகொள்ளவேயில்லை. காலை தேநீர்வேளையில்நீ அனுப்பும்இதய சின்னமும்முத்த ஸ்மைலியும்இன்று காணவேயில்லை. என் தொலைப்பேசிசிணுங்கவே இல்லைநானும் தான்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கானகத்தின் குரல் | ஓர் அனுபவப்பகிர்வு | தாமரைச்செல்வி (படங்கள் இணைப்பு)

எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ண் மாநிலத்திலுள்ள Neurum Creek என்னும் இடத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வந்த தனது அனுபவ உணர்வுகளை வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் பகிர்ந்து கொள்கின்றார்.

மறுபக்கம் | சிறுகதை | நிலாவண்ணன்

அது, தைப்பிங் நகரிலுள்ள பெயர் பெற்ற தனியார் மருத்துமனை. சிறப்புப் பிரிவு அதாவது முதல் வகுப்பு. பள்ளியில் முதல் வகுப்பு என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். இங்கு வேறு மாதிரி....

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

புதிய அவதாரம் எடுத்த அமலா பால்!

தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர்,...

இந்தியா நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது!

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட்...

ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது!

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள...

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

குழந்தைகளை தனித்து செயல்பட அனுமதியுங்கள்…

குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும்.

10 நிமிடத்தில் செய்யலாம் காளான் சாதம்

காளானில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காளான் வைத்து சூப்பரான பத்தே நிமிடத்தில் சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

துயர் பகிர்வு